அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்திருக்கிறார். இது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதனைதொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

Advertisment

vijay with vijay sethupathy

இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது.

Advertisment

தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.

Advertisment

அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி அடுத்த வருட கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

alt="photo" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="01a7091f-71ae-4406-a27a-ea7cc32905a0" height="171" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x90_14.jpg" width="382" />

தற்போது தளபதி 64 படத்தின் பூஜை காலையில் நடைபெற்றுள்ளது. பூஜையில் கலந்துகொண்ட விஜய், விஜய்சேதுபதி, இயக்குனர் லோகேஷ், மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்டோர் க்ரூப்பாக இருப்பதுபோன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தின் ஹைலைட்டே விஜய் சேதுபதியும், விஜய்யும் அருகே நிற்பதுபோல வெளியாகிருக்கும் புகைப்படத்து பார்த்து ரசிகர்கள் பலரும் கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறது என்று பதிவிட்டு வருகின்றனர்.

தரமணி பிலிம் சிட்டியில் பூஜை நடைபெற்றுள்ளது. விஜய்யின் சில காட்சிகளை இன்றே படம் எடுக்க தொடங்கிவிட்டார்களாம். மொத்தம் 100 நாட்கள் நடைபெறும் இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் சென்னையில் படமெடுக்கப்பட இருப்பதாகவும், கடைசி கட்டத்தில் டெல்லியில் படமெடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.