vijay and rashmika mandanna selfie goes viral

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'வாரிசு' படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தின் முதல் பாடல் வரும் தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகசொல்லப்படுகிறது. இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு லோகேஷ் இயக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தவுள்ளாராம்.

Advertisment