தற்போதைய தமிழ் திரையுலகில் அதிகப்படியான இளைஞர்களை தங்களின் ரசிகர்களாய் வைத்திருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரின் படமும் ஒரு சேர ஒரே நாளில் வந்தால் தியேட்டர் வாசல்களில் திருவிழாக்கோலம் தான்.

Advertisment

ajith vs vijay

தற்போது விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அஜித் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இறுதிகட்ட வேலையில் இப்படம் உள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத்தான் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல விஜய்யின் அடுத்த படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவ்விரு படங்களும் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Advertisment

alt="net" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5cfca12d-d96c-46fd-af3a-4f6d6b189b62" height="128" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105_7.png" width="375" />

கடந்த 2014ஆம் ஆண்டு வீரம் மற்றும் ஜில்லா உள்ளிட்ட இரு படங்களும் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.