Advertisment

விஜய், அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் மோதல்... அஷ்வின் வருத்தம்...

சமூக வலைதளங்களில் இந்த நட்சத்திரங்களின் ரசிகர்களுடைய சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது. உலகில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு இது மட்டும் ஒரு தீரா பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒருவருக்கு பிடித்திருந்தால் மற்றொருவரை இழிவுப்படுத்த அவசியம் இல்லை என்று தன்னுடைய ரசிகர்களுக்கு ஒவ்வொரு நட்சத்திரமும் பாடம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் என்ற பேரில் இருக்கும் வெறியர்களுக்கு இது புரியவே புரியாது போலும்.

Advertisment

ashwin

Advertisment

குறிப்பாக விஜய் அஜித் ரசிகர்களின் மோதல் சமூக வலைதளத்தில் அதிகரித்துகொண்டே இருக்கிறது. கடந்த ஒரு வருடங்களாக மாதம் ஏதாவது ஒன்று அபத்தமான டேகை யாரவது ஒரு சாரார் ட்ரெண்ட் செய்துகொண்டுதான் வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ரிப் ஆக்டர் விஜய் என்று அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக ஆகஸ்ட் 8 பாடையகட்டு என்று விஜய் ரசிகர்கள் நேற்று ட்ரெண்ட் செய்தனர். கடந்த மாதம் விஜய் பிறந்தநாள் அன்று இதேபோல சில அபத்தமான டேகுகளை இவ்விரு ரசிகர்களும் போட்டிபோட்டு ட்ரெண்ட் செய்தனர்.

இதை விமர்சித்து கிரிக்கெட் வீரர் அஷ்வின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “சில நாட்களுக்கும் முன்னர் சிறிய கல் ஒன்று நமது கிரகத்தை தாக்கியது. வழக்கத்துக்கு மாறான பருவ நிலைகாலங்களால் பல்வேறு நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நமது நாட்டில் பல்வேறு இடங்களில் வறட்சி நிலவுகிறது. ஆனால் நமது அழகான மாநிலத்தின் இளம் தலைமுறையினர்... #RIPactorVIJAY என்பதை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

actor vijay ajith kumar Ashwin
இதையும் படியுங்கள்
Subscribe