கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் உடல்நிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி ஆகியோர் அவரை சந்தித்தபொழுது எடுத்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. மற்ற அனைத்து கட்சி தலைவர்களும் திரையுலக பிரமுகர்கள் தொழிலதிபர்கள் என கலைஞரின் உடல்நலத்தை விசாரிக்க தினமும் பலர் காவேரி மருத்துவமனை வந்து செல்கின்றனர். அதில் அரசியல் தலைவர்களே அதிகமாக இருந்த நிலையில், நேற்று முக்கிய நடிகர்களும் வந்து நலம் விசாரித்தனர். நடிகர்கள் அஜித், விஜய், கவுண்டமணி, விவேக், விஜய் ஆண்டனி ஆகியோர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
பொதுவாக இதுவரை வந்தவர்களில் பெரும்பாலானோர் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் விசாரித்தறிந்த தகவல்களை பகிர்ந்தனர். நடிகர் விஜய் ஆண்டனி, "இத்தனை வருஷமா ஒரு கட்சியை நிலை நிறுத்தி, நாட்டை வழிநடத்தி, தமிழுக்கு சேவை செய்த அவரின் அறிவு மிகப்பெரியது. அந்த வரலாறு நம்மையெல்லாம் விட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விடாது. நான் விசாரித்தவரை கலைஞர் அய்யா நன்றாக உடல்நலம் பெற்று வருகிறார். கூடிய சீக்கிரம் வீடு திரும்புவார். நல்லது நடக்கும்" என்று கூறினார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நடிகர் விவேக், "சினிமா, அரசியல் இரண்டிலும் பாடலாசிரியர், இலக்கியவாதி, அரசியல் ராஜதந்திரி, உழைப்பாளர் என எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும் கலைஞர் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர். அவர் கூடிய சீக்கிரம் இல்லம் திரும்பி தமிழ்ப்பணியைத் தொடர்வார் என நம்புகிறேன்" என்று கூறினார்.
முன்னணி நடிகர்களான அஜித், விஜய் இருவருமே செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றனர். வழக்கமான காரில் அல்லாமல் சிறிய காரில் வந்த விஜய், எட்டு நிமிடங்கள் மட்டுமே மருத்துவமனையில் இருந்தார். ஸ்டாலினை சந்தித்த பின்னர் வாயிலில் அல்லாமல் வேறு வழியில் வெளியேறினார். அஜித்தும் குறைந்த நேரமே இருந்தார். அவரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. நடிகர் கவுண்டமணி வந்து பொழுது, திராவிடர் கழகம் தலைவர் வீரமணியும் அங்கிருந்தார். இருவரும் இணைந்தே ஸ்டாலினை சந்தித்தனர்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
இவர்களுக்கு முன்பே டி.ஆர்., சிவக்குமார், சூரியா, அதன்பின் நடிகர் ரஜினிகாந்த், நாசர், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கலைஞர் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர். இன்று (2 ஆகஸ்ட்) நடிகர் சிவகார்த்திகேயன் மருத்துவமனைக்கு வந்தார்.