Advertisment

28 வருடங்கள் கழித்து ஒரே திரையில் விஜய் - அஜித்; வெளியான மாஸ் அப்டேட்

vijay ajith starring Rajavin Parvaiyile re release in chennai

தமிழில் உச்ச நட்சத்திரங்களாக திகழும் விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் பொங்கலைமுன்னிட்டு வெளியாகவுள்ளது. இதில் துணிவு படம் 11 ஆம் தேதியும் வாரிசு படம் 12 ஆம் தேதியும் வெளியாகவுள்ளதாகத்தெரிகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் பல முன்னணி திரையரங்குகள் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளனர்.

Advertisment

கிட்டத்தட்ட 9 ஆண்டுகள்கழித்து இருவரின் படங்களும்ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படங்களை வரவேற்க ரசிகர்களும் பேனர், போஸ்டர் எனத்தயாராகி வருகின்றனர். இப்படித்தனித்தனியே வெளியாகும் இருவரின் படங்களையும்ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் சூழலில், சர்ப்ரைசாக விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்த 'ராஜாவின் பார்வையிலே' படம்ரீ-ரிலீசாகிறது.

Advertisment

சென்னையில் குறிப்பிட்ட திரையரங்குகளில்வருகிற 6 ஆம் தேதி முதல் இப்படம் வெளியாகிறது. அதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விஜய் மற்றும் அஜித் இணைந்துபுதிதாக ஒரு படத்தில் நடித்து விடுவார்களா என்பது பல ரசிகர்களின் கனவு.ஆனால், இருவரும் தங்களது ஆரம்பக் காலகட்டத்தில்'ராஜாவின் பார்வையிலே'படம் மூலம்ஒன்றாக நடித்ததோடு சரி. ரசிகர்கள் 28 வருடங்களுக்குப் பிறகு இருவரையும் ஒன்றாக திரையில் பார்க்கவுள்ளனர். இதனால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

'ராஜாவின் பார்வையிலே' திரைப்படம்ஜானகி சௌந்தர் இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் விஜய் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க அஜித் கேமியோ ரோலில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

varisu movie Thunivu ACTOR AJITHKUMAR actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe