தமிழ்சினிமாவில்முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தனது 48-வதுபிறந்தநாளை இன்று (22.6.2022) கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களதுவாழ்த்துக்களைத்தெரிவித்து வருகின்றனர். இதனிடையே விஜய் தற்போது நடித்து வரும் 'வாரிசு' படத்தின்போஸ்டர்கள்வெளியாகி சமூக வலைத்தளத்தில்வைரலாகிவருகிறது.தில்ராஜு தயாரிக்கும் இப்படத்தைவம்சிபைடிப்பள்ளிஇயக்குகிறார். குடும்ப பின்னணி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்துலோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய்நடிக்கவுள்ளதாகக்கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய், முன்னாள் இந்தியகிரிக்கெட்வீரர் மகேந்திரசிங்தோனிதயாரிப்பில் ஒரு படம்நடிக்கவுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.தோனி,கிரிக்கெட்டைதாண்டி 'தோனிஎன்டர்டைன்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 'ரோர்ஆஃப்லயன்' என்றஆவணத்தொடர்உள்ளிட்ட சிலபடைப்புக்களைதயாரித்துள்ளது.அதனைத்தொடர்ந்து இந்தியாவில் முதல் முறையாகஅனிமேஷன்ஸ்பைதொடராக உருவாகும் 'கேப்டன்7' என்றசீரிஸைதயாரித்து வருகிறது.
மகேந்திரசிங்தோனி, தற்போது தமிழில் ஒரு திரைப்படம்தயாரிக்கவுள்ளதாககூறப்படுகிறது. அந்த படத்தில் தான், விஜய் நடிக்கவுள்ளதாகவும் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதோடு,விஜயுடன்சேர்ந்துதோனியும்இப்படத்தில்நடிக்கவுள்ளதாகசொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்தானஅறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விஜய், சில மாதங்களுக்கு முன்பு விளம்பரபடப்பிடிப்பிற்காகச்சென்னை வந்ததேனியைநேரில் சந்தித்துப்பேசினார்என்பதுகுறிப்பிடத்தக்கது.