Advertisment

நியூ ரோலில் விஜய்; வி செண்டிமெண்டுடன் வெளியான வாரிசு அப்டேட்

 Vijay  Act As App Desingner Varisu Flim

விஜய், தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கில் ’வாரிசுடு’ என தலைப்பில் உருவாகிவரும் இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப பின்னணி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் 'விஜய் ராஜேந்திரன்' என்ற பெயரில் அப்ளிகேஷன் டிசைனராக விஜய் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயரும் 'வி' யில் ஆரம்பிப்பதால் விஜய்யும் வி செண்டிமெண்டை கையில் எடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் வெளியான போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

actor vijay Vamshi Paidipally varisu movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe