Advertisment

"விஜய் பாராட்டினார்" - பிரபல நடிகர் நெகிழ்ச்சி

vijay about sudeep kishen trailer

Advertisment

லோகேஷ் கனகராஜ் வழங்க 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனம் தயாரித்துள்ளபுதிய படம்'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரதுகவனத்தை ஈர்த்தது. இப்படம் நாளை (03.02.2023) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், சந்தீப் கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில்'மைக்கேல்' படட்ரைலர்குறித்து விஜய் பாராட்டியுள்ளதாகத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மைக்கேலுக்கு உங்கள் அன்பான வார்த்தைகள், அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி அண்ணா. மிகவும் பணிவாகவும் ஊக்கமளிப்பதாகவும்இருந்ததற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய்யுடன் எடுத்து கொண்டபுகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் 'சந்தீப் கிஷன்'. தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் அறிமுகமாகி 'மாநகரம்' படத்தின் மூலம் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து இவர் நடிப்பில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' மற்றும் 'மாயவன்'ஆகிய படங்கள் வெளியாகியிருந்ததுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

MICHAEL movie sundeep kishan actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe