Advertisment

"அவங்க படத்தை என் கேர்ள் ப்ரண்டோட போய் பார்த்தேன்" - நினைவுகளை ஷேர் செய்த விஜய்

vijay about Kushboo in varisu movie audio launch

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Advertisment

அடுத்த மாதம் வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் கடந்த 24 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய், ராஷ்மிகா, இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய விஜய், வழக்கமான தன் பாணியில் குட்டி கதை சொல்லி ரஞ்சிதமே பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Advertisment

அப்போது அவர் பேசுகையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்களே, நாம நல்லா இருக்கணும்னா நம்முடன் பழகுபவர்கள் நல்லா இருக்கணும். என்னை உருவாக்கிய உங்களுக்கு நன்றி" என ஆரம்பித்த அவர் தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர்கள் யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யாஉள்ளிட்ட பலரையும் பாராட்டினார்.

தொடர்ந்து நடிகை குஷ்புவைப் பற்றி பேசிய விஜய், "குஷ்புவைப் பார்த்தாலே அவங்க நடிச்ச சின்னதம்பி படம் தான் நியாபகம் வரும். அந்தப் படத்தைத்தியேட்டர்ல அடிச்சி புடிச்சி போய் பார்த்தேன். என் நண்பர்களோட போய் பார்த்தேன். அப்புறம் என் கேர்ள் ப்ரண்டோட போய் பார்த்தன்" என்று சொல்ல குறுக்கிட்ட தொகுப்பாளினி ரம்யா, "சார் கேர்ள் ப்ரண்டுன்னு சொன்னீங்க... அவங்க பெயர் என்ன சார்?" எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த விஜய், "நீ கொஞ்சம் வெளிய இருமா..போ மா..." என்றார். உடனே அரங்கத்தில் இருந்த ரசிகர்கள்சிரிப்பில் மகிழ்ந்தனர்.

actress kushboo varisu movie actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe