vijay 69 movie first look update

அ. வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் விஜய் கதாநாயகனாக நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக ‘தளபதி 69’ என அழைக்கப்படும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பிரபல நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Advertisment

முழு நேர அரசியலுக்கு முன் விஜய்யின் கடைசி படமாக சொல்லப்படும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் இந்தாண்டு அக்டோபரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நாளை மறுநாள் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடைக்‌ஷன் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து மேலும் ஒரு அப்டேட்டையும் பகிர்ந்துள்ளது. படத்தின் பணிகள் 69 சதவீதம் முடிந்துள்ளதாக அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Advertisment