vijay 69 heroine update

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. காவலன் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேரளாவிற்கு விஜய் சென்றதால், அவருக்கு கேரள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். படப்பிடிப்பு தளத்திலும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தினசரி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

vijay 69 heroine update

இப்படத்தை அடுத்து விஜய்யின் கடைசி படமாக உருவாகும் அவரது 69ஆவது படத்தை அ.வினோத் இயக்கவுள்ளதாக தகவல் உலா வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திரிஷா, சமந்தா, மிருனால் தாக்கூர் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆகிய நான்கு நடிகைகளிடமும் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

vijay 69 heroine update

இதனிடையே தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், தனது 69வது படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisment