vijay 68 cast update

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ட்ரைலர் வருகிற 5ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அப்பா, மகன் என விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும் மற்றொரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. பின்பு ஜோதிகாவுக்கு பதில் சினேகா கமிட்டாகியுள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் ஜெய்யும் அவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணா தாஸ் இணைந்துள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழு அமெரிக்கா சென்று, அங்கு விஎஃபக்ஸ் ஸ்கேன் மூலம் விஜய்க்கு டெஸ்ட் லுக் எடுக்கப்பட்டது.

Advertisment

இப்படத்தின் பூஜை நேற்று நடந்துள்ளது. பூஜையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ லியோ வெளியீட்டிற்கு பிறகு வெளியாகும் என வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் காமெடி கலந்த படமாக இருக்குமெனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார். இப்போது தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடிக்கிறார்.

மீனாட்சி சவுத்ரி மட்டுமல்லாமல் பிரபு தேவா, லைலா, பிரஷாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக முணுமுணுக்கப்படுகிறது.