விஜய் தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது யார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

Advertisment

vijay sneha

கடந்த இரண்டு நாட்களாக விஜய்யுடன் ஒரு பெண் இயக்குனர் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இந்த பெண் இயக்குனர்தான் தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தை இயக்கிய சினேகா பிரிட்டோதான் விஜய்யுடன் வைரலாகும் படத்தில் உடன் இருப்பது.

மேலும் சினேகா பிரிட்டோ, விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் நடிக்கவுள்ள 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தை தயாரிப்பது சினேகா பிரிட்டோ என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ‘தளபதி 64’ படத்தில் அவர் உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Advertisment

alt="natpuna ennanu theryiuma" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1ce348e8-178a-4960-9fe6-c3077c0977e1" height="135" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105_0.png" width="395" />

சினேகா பிரிட்டோவின் தந்தை பி.விமல் என்பவர் விஜய் ஆரம்பகாலத்தில் நடித்த ரசிகன், தேவா மற்றும் செந்தூரப்பாண்டி போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சினேகா பிரிட்டோ,புதிய பட நிறுவனம் ஒன்றை தொடங்கி அந்த பட நிறுவனத்தின் மூலம் தளபதி 64 படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.