விஜய் தற்போது பிகில் படத்தில், தான் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டார். டப்பிங் வேலைகளிலும் அவர் பேசத் தொடங்கிவிட்டார் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகுவதற்கான அனைத்து வேலைகளையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது படக்குழு.

vijay

Advertisment

Advertisment

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்ற தகவல்கள் கடந்த இரண்டு மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

மாநகரம் என்ற படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் 64வது படத்தை இயக்கிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். தற்போது லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படம் கைதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பி.வி.கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அக்டோபரில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி, ஜனவரி 2020க்குள் முழு ஷூட்டிங்கையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

ஜனவரி 2020-ல் முழுப் படப்பிடிப்பையும் முடித்து, கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.