நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைந்த படம் நானும் ரவுடிதான். இப்படத்தில் நயன்தாரா காது கேளாத பெண்ணாக நடித்து இருந்தார். இந்த பாத்திரம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதிலிருந்தே நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக பழகி வந்தார். இவர்கள் இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகும் வண்ணம் இருந்து வந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் கடந்த மாதம் காதலர் தினத்தை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமெரிக்காவில் கொண்டாடி விட்டு வந்தனர். அப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தையும் டுவிட்டரில் வெளியிட்டனர். தற்போது மீண்டும் அமெரிக்கா சென்ற இந்த ஜோடி அங்கு பல இடங்களில் ஜோடியாக சுற்றிய படங்களும், இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட படங்களையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தற்போது இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
போன மாசம் அமெரிக்கா... இந்த மாசம்? நயன்தாரா-விக்னேஷ் சிவன் ட்ரிப்!
Advertisment
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03/nayan2_0.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03/nayan3_0.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03/nayan4_0.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03/whatsapp_image_2018-03-06_at_11.31.22_am_0.jpeg)