Advertisment

"மொத்தம் 36 முறை ஆக்ஷன் சொன்னேன்" - தோனியை இயக்கியது குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி 

Vignesh Shivan

Advertisment

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான சிறு விளம்பர வீடியோவை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

தோனியை சந்தித்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்த விக்னேஷ் சிவன், ஆக்ஷன் கூறி தோனியை இயக்க இருப்பதாக நேற்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் தோனி கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், சென்னை அணிக்கான ப்ரோமோ வீடியோவை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

தன்னுடைய அடுத்த பதிவில் இது குறித்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், மொத்தம் 36 முறை தோனிக்கு ஆக்ஷன் தெரிவித்ததாகவும் அதை ஒவ்வொரு முறையும் சிறு குழந்தைபோல விரலால் எண்ணிக்கொண்டு இருந்ததாகவும் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்தப் பதிவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

Advertisment

vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe