
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுக்கு உலக பெண்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவ்வப்போது இவர்கள் வெளிநாடு சுற்றுலா செல்லும்போது எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதை வைத்தே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று வெளியுலகத்திற்கு தெரியவந்தது.
இந்நிலையில் மார்ச் 8 உலக மகளிர் தினமான அன்று நயன்தாராவின் புகைப்படத்தை பதிவிட்டு அதனுடன், “நீ என் உலக அழகியே. உன்னைப் போல் ஒருத்தி இல்லையே. இனிய மகளிர் தின வாழ்த்துகள். வலிமையான மகளிர்க்கு. மற்றவர்களைவிட தன் மீதான நம்பிக்கையை அதிகமாகக் கொண்டிருக்கும் பெண்களே, நீங்கள்தான் இந்த சுற்றுச்சூழலை அழகாக மிளிரச் செய்கிறீர்கள். நன்றி. அத்தகைய பெண்கள் மீது அன்புகொண்டு மரியாதை செலுத்தி இந்த உலகை எல்லாப் பெண்களுக்குமான சிறந்த இடமாக ஒன்றிணைந்து மாற்றுவோம்” என்று பதிவிட்டிருந்தார்.