/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/37_8.jpg)
நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் துவங்கியது. ஒரு சில நாட்கள் மட்டுமே நடந்துள்ள படப்பிடிப்பில், சில முக்கியக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, படக்குழு ஹைதராபாத் விரைந்துள்ளது. ஹைதராபாத்தில் நடிகர் விஜய் சேதுபதியை, இயக்குனர் விக்னேஷ் சிவன் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)