Advertisment

"முதன் முதலாக நயன்தாராவை இங்குதான் சந்தித்தேன்" - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

vignesh shivan talk about nayanathara

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு நேற்று முன்தினம் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்திஉள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுமணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது நயன்தாரா கோயில் வளாகத்தில் செருப்புகளுடன் சென்றதாக சர்ச்சை எழுந்த நிலையில் இதற்குநயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து மன்னிப்பு கடிதம் கொடுக்கப்பட்டது.

Advertisment

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் திருமணத்திற்கு பிறகு கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். அப்போது பேசிய நயன்தாரா, "இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்குநன்றி. இப்போது எங்களுக்கு கல்யாணமாகி விட்டது. இதன் பிறகும்நீங்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

இதையடுத்து விக்னேஷ் சிவன், "உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்குநன்றி. நான் முதன்முதலில் நயன்தாராவிடம் கதை சொல்வதற்காக இந்த ஹோட்டலில் தான் சந்தித்தேன். மீண்டும் அதே ஹோட்டலில் ஜோடியாக உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து எங்களது திரை பயணம் தொடரும் " என்றார்.

tamil cinema vignesh shivan ACTRESS NAYANTHARA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe