vignesh shivan story viral

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது எல்.ஐ.கே.(லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே சமூக வலைதளங்களில் அக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து படம் தொடர்பாகவும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகவும் தொடர்ந்து பதிவிட்டு வருவார்.

Advertisment

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சில நேரங்களில், விஷயங்கள் எப்படி நடக்கும் என்று கவலைப்படுவதை நிறுத்தும்போது மேஜிக் நடக்கும்” என்று யூனிவர்ஸ் சொல்வதாக பதிவை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியான நாளில் விக்னேஷ் சிவன் இந்த பதிவை பகிர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விடாமுயற்சி படம் அஜித்தின் 62வது படமாக உருவாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முன்னதாக அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்பு சில காரணங்களால் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.