Advertisment

"மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ" - 'ஏகே 62' க்கு ரெடியான விக்னேஷ் சிவன் 

vignesh shivan share valimai song lyrics and ready ak62 film

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.இதனைத்தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ எடை குறைக்க திட்டமிட்டு தற்போது 10 கிலோ வரை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை விரைந்துமுடித்து தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

இதனைத்தொடர்ந்து 'ஏகே 62' படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கஇருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலிமை படத்தின் "வேற மாறி" பாடலில் இடம்பெறும் "மேல இருக்கிறவனநம்ப நல்லா கத்துக்கோ" என்ற வரிகளைப் பகிர்ந்துள்ளார். ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்தப் பதிவு மேற்கண்ட தகவலைஉறுதி செய்யும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ajith AK61 AK62 valimai vignesh shivan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe