Advertisment

விக்னேஷ் சிவன் வெளியிட்ட டைட்டில் போஸ்டர்

Vignesh Shivan released the Title poster

விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக 'டாணாக்காரன்' படம் வெளியானது. தமிழ் இயக்கியிருந்த இப்படத்தில் அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எஸ்.ஆர் பிரபு தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். காவல்துறையின் பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்கள், மிரட்டல்கள், அரசியல் போன்றவற்றை நேரடியாகத் தோலுரித்துக் காட்டியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தில் நடித்து வருகிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை கார்த்திக் அட்வய்ட் இயக்குகிறார்.

Advertisment

இந்நிலையில் விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்போஸ்டரை வெளியிட்டுள்ளார். 'இரத்தமும் சதையும்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ஹரேந்தர் பாலச்சந்தர் இயக்குகிறார். கார்த்திக் அட்வய்ட் உள்ளிட்ட மூன்று பேர் தயாரிக்கும் இப்படம் பல உண்மை சம்பவங்களை தழுவி உருவாகிறது. பறவை மற்றும் விலங்கு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் வெளியாகியுள்ள இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

vikram prabhu vignesh shivan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe