'பரியேறும் பெருமாள்', 'பிகில்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கதிர் கடைசியாக 'சூழல்' என்ற வெப் தொடரின் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ஷிவ் மோஹா இயக்கத்தில் குமார் தயாரிப்பில் 'ஆசை' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதிருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்கிறார். இசைப்பணிகளை ரேவா என்பவர் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் 'ஆசை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் கதிர் மற்றும் திவ்யபாரதி இருவரின் புகைப்படம் தலைகீழாக இருப்பது போல் அமைந்துள்ளது. ரொமான்டிக் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.