பிகில், தர்பார் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டு நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸில் நடிக்கிறார். அவள் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ்தான் நயன்தாராவை வைத்து நெற்றிக்கண் என்கிற த்ரில்லர் படத்தை இயக்குகிறார். விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படமான இதில் கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.

vignesh

Advertisment

இப்படத்தில் கண்பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைந்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் தெரிவித்துள்ளார்.

Advertisment

alt="super duper" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="3d7052d8-d80a-4739-9d40-c8cf1b113123" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/super%20duper_2.png" />

மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. ஒரு வழக்கு, இரண்டு சாட்சிகள், இரண்டு விதமான வாக்குமூலங்கள். உண்மை எப்படி வெளியே வந்தது என்பதே இப்படத்தின் கதை.