style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் அடுத்ததாக கொலையுதிர் காலம், மிஸ்டர்.லோக்கல், விஜய் 63 ஆகிய தமிழ் படங்களிலும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்திலும், ‘லவ் ஆக்ஷன் டிராமா’ மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படங்களை முடித்த கையோடு நயன்தாரா ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிக்கிறார். நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார் என தகவல் கசிந்துள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.