மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்கு சிறுவர்கள் மற்றும் கலையரசன்,நிகிலாவிமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தை மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும் இணைந்து தயாரிக்கடிஸ்னிடிஸ்னிப்ளஸ்ஹாட்ஸ்டார்மற்றும் நவ்விஸ்டூடியோஸ்இணைந்து வழங்குகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அண்மையில் இப்படத்தின்ட்ரைலர்வெளியாகிப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் சமீபத்தில் நடந்தப்ரீரிலீஸ்நிகழ்ச்சியில் முன்னணி இயக்குநர்கள் வெற்றிமாறன்,மிஷ்கின், பாரதிராஜாஎனபலரும் பாராட்டிப் பேசியிருந்தனர். மேலும் சிவகார்த்திகேயன், சிம்பு எனப் பல முன்னணி நடிகர்களும் படக்குழுவைப் பாராட்டியிருந்தனர்.
இந்த நிலையில்விக்னேஷ்சிவன் தற்போது வாழை படத்தைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஎக்ஸ்பதிவில், மாரி செல்வராஜைக் குறிப்பிட்டு, “உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளைப் பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது, வாழையில் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு,உன்மீதானமரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்திருக்கிறது. இனி, உன் படைப்புகள் மீதான மரியாதையும் அவ்வாறே கூடும். வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும். சிறப்புக் காட்சிக்கு அழைத்தாய், திரை பார்த்து மெய் சிலிர்த்தேன், மீண்டும் பார்க்கும் ஆவலோடு ஆகஸ்டு 23-க்காககாத்திருக்கிறேன்”எனப்பதிவிட்டுள்ளார்.