விக்னேஷ் சிவன் கனவு படத்தில் தலைப்பு மாற்றம்

vignesh shivan pradeep ranganathan lic changed to lik

இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்க எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த அண்டு டிசம்பரில் தொடங்கி, பின்பு படத்திற்கு ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனத் தலைப்பு வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தலைப்பு என்னுடையது என்று கூறி இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். பின்பு எல்.ஐ.சி நிறுவனம், லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி பட நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. மேலும் இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக விவசாயி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இதில் சீமான் நடிப்பது உறுதியாகிவிட்டதாக நம்மதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் இன்று இப்படத்தின் பிரதீப் நங்கநாதன் பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக படத்தின் டைட்டில் போஸ்டரை நள்ளிரவு 12.12க்கு வெளியிட்டது. படத்தின் தலைப்பு எல்.ஐ.கே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி - Love Insurance Kompany) என மாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டர் கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது. இப்படம் தனது கனவு படம் என்று விக்ஞேஷ் சிவன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pradeep Ranganathan vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe