/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/37_7.jpg)
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சவென் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் அறிவிப்பானது கடந்த பிப்ரவரி மாதமே வெளியானநிலையில், கரோனா காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, கதையில் தனது கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை எனக் கூறி இப்படத்தில் இருந்து சமந்தா விலகியுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இருப்பினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் துவக்கியுள்ளது படக்குழு. இதில், இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூஜையையடுத்து, முதற்கட்டமாக விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா படக்குழுவோடு விரைவில் இணையவுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)