Published on 04/02/2021 | Edited on 04/02/2021

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், தற்போது தயாராகியுள்ள படம் 'கூழாங்கல்'. முதலில் வேறு ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வந்த இப்படம், பின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்குக் கைமாற்றப்பட்டது. பி.எஸ் வினோத்ராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விரைவில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம், முதற்கட்ட வேலையாகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில், நெதர்லாந்தில் நடைபெறும் ஒரு திரைப்பட விழாவில் திரையிட, கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்வின் போது கூழாங்கல் படக்குழுவினரோடு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
