காதல் அனுபவத்தை பகிரும் விக்கி - நயன் - ப்ரோமோ வீடியோ வெளியிட்ட நெட்பிளிக்ஸ்

vignesh shivan nayanthara marriage promo video released by netflix

நயன்தாரா - விக்னேஷ் சிவன், இருவருக்கும் கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சரத்குமார், சூர்யா, ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. மேலும் அதை இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டார். இதனிடையே திருமணம் புகைப்படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a7b28642-e3c0-419c-9718-c9e68030f688" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_38.jpg" />

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அவர்களது காதல் அனுபவத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். மேலும் விரைவில் திருமண வீடியோ வெளியாகும் என தங்களது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ACTRESS NAYANTHARA netflix vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe