vignesh shivan nayanthara gave a gift to road side peoples

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, கடைசியாக 'கனெக்ட்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனைத்தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவி - அஹ்மத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடித்துள்ள நயன்தாராஇந்தியில் ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.

Advertisment

இதனிடையே, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றார். இதில் சட்ட ரீதியாக விதிகள் மீறப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்பு விசாரணையில், சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் எனத்தெரியவந்தது.

Advertisment

இதையடுத்து, தனது இரட்டைக் குழந்தைகள் மற்றும் கணவருடன் வாழ்ந்து வருகிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்களைச் சந்தித்து பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோதற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.