vignesh shivan

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கரோனா வைரஸ், இந்தியாவின் மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே தினசரி 1,500க்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பு கேஸ்கள் வருகின்றன. அதில் சென்னை வாசிகளின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகமாக உள்ளது.

Advertisment

இதன்காரணமக கடந்த 19ஆம் தேதி முதல் அடுத்த 12 நாளுக்கு சென்னை மற்று அதைச்சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தமிழக திரையுலகைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலருக்கும் இந்தத் தொற்று இருப்பதாகச் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகையான நயன்தாராவுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவரும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்தச் செய்திகளை மறுக்கும் விதமாக விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் நயன்தாராவுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அதில் “நயன்தாரா நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவருக்குக் கரோனா தொற்று எல்லாம் இல்லை. அது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment