Advertisment

இயக்குநர் விக்னேஷ் சிவன் மத்திய அமைச்சருடன் சந்திப்பு

vignesh shivan met central minister anurag thakur

Advertisment

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்தும் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், தமிழில் இருந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தும் ரௌடி பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிப்பில் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படமும் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ‘ஸ்வீட் பிரியாணி’ குறும்படமும் திரையிடப்பட்டன.‘கூழாங்கல்’ படத்தைப் பார்த்த ரசிகர்கள், படம் முடிந்ததும் எழுந்து நின்று பாராட்டுதெரிவித்தனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="57811409-70af-4617-96c9-d0b0b532e944" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_72.jpg" />

இந்நிலையில், ‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்த விக்னேஷ் சிவன் மத்திய விளையாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரைசந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தவிக்னேஷ் சிவன், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் ‘கூழாங்கல்’ படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

‘கூழாங்கல்’ திரைப்படமானது, இந்திய அரசு சார்பில் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் தொடர்ந்து விருதுகளை வென்றுவருவது குறிப்பிடத்தக்கது.

vigneshshivan Nayanthara koozhangal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe