/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/irumbu thirai_1.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vignesh sivan_0.jpg)
நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் "கோலமாவு கோகிலா" இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . "எனக்கு கல்யாண வயசுதான் வந்துடிச்சி டி" என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் பாடியுள்ளார் . இந்தப் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று அதற்கு நிரூபணமாக இருவரும் அமெரிக்கா சென்று ஜோடியாக எடுத்துக்கொண்ட செல்ஃபிகள் அத்தனையும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியாகின. இந்த செல்ஃபிகள் நயன்தாராவின் ரசிகர்களை மிகவும் மனமுடைய செய்தது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் நேற்று இந்த பாடல் வெளியான பிறகு நயன்தாரவுக்கு தனது காதலை தெரிவிக்கும் வகையில் "நேக்கு கல்யாண வயசு வந்துடிச்சி டி" என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த பாடலில் யோகிபாபு நயன்தாரவுக்கு பிரபோஸ் செய்வதால் விக்னேஷ் சிவன் அவரது நடிப்பை பாராட்டியும் சிறிது கோபத்தையும் வெளிக்காட்டினார் . இதற்கு நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனை கலாய்த்து வருகின்றனர். அதே சமயத்தில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயனையும் பாராட்டியுள்ளார்.
Follow Us