/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/87_33.jpg)
மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'துணிவு' படம் கடந்த 11 ஆம் தேதி உலகெங்கும் உள்ளதிரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் திரைப்பிரபலங்களும் இப்படம் குறித்த தங்களதுகருத்துகளைசமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர்விக்னேஷ் சிவன் துணிவு படம் பார்த்து, "திரையில் கிங்-ஐ பார்ப்பது எப்போதும் அற்புதமான உணர்வு. எல்லா இடத்திலும் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர்" எனக் குறிப்பிட்டுஹெச்.வினோத்மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இதனிடையே, துணிவு படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியர், அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின்கவனத்தை ஈர்த்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)