படங்களின் புரமோஷனுக்கு நயன்தாரா ஏன் வருவதில்லை? - விக்னேஷ் சிவன் விளக்கம்

vignesh shivan about nayanthara promotion issue

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனம் தொடங்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். அதற்கான வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்தது. அதில் விக்னேஷ் சிவனோடு நயன்தாராவும் கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் நயன்தாரா தான் நடித்த படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்துவந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவர் தயாரித்து நடித்த கனெக்ட் படத்திற்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி மேடையில் பேசிய விக்னேஷ் சிவன் நயன்தாரா ப்ரமோஷன் நிகழ்ச்சி பங்கேற்பது தொடர்பாக பேசினார். அவர் பேசுகையில், "நயன்தாராவுக்கு ஒரு விஷயம் சரி என தோன்றினால் மட்டுமே அதை ப்ரோமோஷன் செய்வார். நிறைய நேரங்களில் அவர் நடித்த படங்களையே அவர் ப்ரொமோட் செய்யாமல் இருந்திருக்கிறார். அது, ஒரு படம் அதுவாகவே ப்ரொமோட் செய்துகொள்ளும் என்ற அர்த்தத்தில் இல்லை. ஒரு நல்ல விஷயம் எதுவாக இருந்தாலும் அதுவே தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளும். அது தான் அவருடைய உள் நம்பிக்கை.

ஆரம்ப கட்டத்தில் அவர் ஒரு பிராண்ட் அம்பாசிடராக வருவார். அதைப் பற்றி பேசுவார். சில புகைப்படங்களை எடுப்பார் என நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. பொருளின் டிசைன், பாட்டில், எழுத்தின் வடிவம், பேக்கேஜ் என முழுவதையும் கவனித்துக் கொண்டார். அதற்காக நிறைய மெனெக்கடல்களை மேற்கொண்டார். அதை எல்லாம் பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் உத்வேகமாக இருந்தது" என்றார்.

Nayanthara vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe