vignesh shivan about dhoni

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். இதனிடையே விவசாயம் செய்வதிலும் விளம்பரங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோனிக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களைத்தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது சமூக வலைத்தளப் பக்கத்தின் வாயிலாக தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "தனிமனிதர்களை மேன்மைப்படுத்துவதில் உங்களைப் போல் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது;நீங்கள் அவர்களை ஆதரிக்கும் விதம்;நீங்கள் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் விதம்;சக வீரர்களுக்கு நீங்கள் எப்போதும் இருக்கும் விதம்;அவர்களுடன் நீங்கள் செய்யும் உரையாடல்கள்;உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழும் விதம்.

Advertisment

உங்களைப் பார்த்து பெருமைப்படக்கூடிய பல விஷயங்களை ஒன்றிணைத்து, இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உங்களை மிகவும் விரும்பப்படும் ஆளுமையாக மாற்றுகிறது. எனது ஐபிஎல் மேட்ச் சர்ட்டில் என் இதயத்திற்கு அருகில் கையெழுத்திட்டதற்கு நன்றி. இது எனக்கு நிறைய அர்த்தத்தை தருகிறது. உங்கள் நல்வாழ்வு, உங்கள் வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்காக நான் எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் மற்றும் ரோல் மாடல்" எனப் பல்வேறு விஷயங்களை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.