vidyut jammwal controversy

அஜித்தின் பில்லா 2 படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜாம்வால். பின்பு விஜய்யின் துப்பாக்கி படம்மூலம் பிரபலமானவர். தொடர்ந்து சூர்யாவின் அஞ்சான் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இந்தியில் முழு கவனமும் செலுத்தி வந்த இவர், ஷேர் சிங் ராணா, கிராக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் கிராக் படம் வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இவர் நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி தனது சமூக வலைத்தளங்களில் அவர் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டார். “இமயமலைக்கு திரும்பினேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் 7-10 நாட்கள் தனியாகக் கழிப்பது என் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது” என குறிப்பிட்டு நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார். இதையடுத்து அவரின் நிர்வாண புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment

இதே போல் கடந்த வருடம் ரன்பீர் சிங் நிர்வாணமாகவும விஷ்னு விஷால் அரை நிர்வாணமாகவும் ஃபோட்டோ ஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.