Vidyut Jammwal

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகும் 'தளபதி 65' படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="496a9eba-d769-496a-a47e-e6934140962c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/sulthan%20ad_17.png" />

Advertisment

'தளபதி 65' படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நடிக்க உள்ளார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இவர், ஏற்கனவே ‘துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளதால், இத்தகவல் உண்மையாக இருக்கலாமென ரசிகர்களும் கருதி வந்தனர். இந்த நிலையில், நடிகர் வித்யுத் ஜம்வால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

'தளபதி 65' படத்தில் விஜய்க்கு வில்லனாக வித்யுத் ஜம்வால் நடிக்கிறார் என ஒருவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து, "நான் காத்திருக்கிறேன்... எனக்கும் ஆசைதான். ஆனால், இந்த செய்தி உண்மையல்ல" என விளக்கமளித்துள்ளார்.

Advertisment

வித்யுத் ஜம்வாலின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, 'தளபதி 65' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பது யாராக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.