/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vidyu-raman.jpg)
பிரபல நடிகை வித்யூலேகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.
கௌதம் வாசுதேவ் மேனனின் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான வித்யூலேகா, பிரபல நடிகர் மோகன் ராமன் மகள் ஆவார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த வித்யூலேகா, தொடக்கத்தில் மேடை நாடக கலைஞராகவும் நடித்து வந்தார்.
அண்மை காலமாக வித்யூலேகா தனது உடல் எடையை குறைத்த அனுபவம் குறித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவார். இந்த நிலையில் நடிகை வித்யூலேகாவுக்கு சமீபத்தில் சஞ்சய் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிச்சயதார்த்தம் ஊரடங்கில் நடைபெற்றதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிச்சயதார்த்தம் கடந்த 26ஆம் தேதி நடைபெற்றதாகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும், அனைவரும் மாஸ்க் அணிந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியதாகவும் வித்யூலேகா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வித்யுலேகாவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)