jovi

வித்யா பாலன் நடிப்பில் ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘தும்ஹரி சூளு’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள 'காற்றின் மொழி' படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. ஜோதிகா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சிம்பு, யோகி பாபு நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாவதை அடுத்து படத்தையும், படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்து வித்யா பாலன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதில்... “எனக்கு ரொம்பவே சந்தோ‌ஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இந்தியில் ‘தும்ஹரி சூளு’ படத்தில் நான் செய்த வேடத்தை, தமிழில் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா செய்திருக்கிறார். ஜோதிகா, ராதாமோகன், தனஞ்ஜெயன் மற்றும் படத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் என் வாழ்த்துக்கள். நான் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்களும் அதேபோல் காத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்" என்றார்.

Advertisment