கமலுக்கு ஜோடியாகும் அஜித் படத்தில் என்ட்ரி கொடுத்த முன்னணி இந்தி ஹீரோயின்?

vidya balan to pair kamalhaasan 234 novie

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு மணிரத்னம், மகேஷ் நாராயணன், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே அ.வினோத் அல்லதுவெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் மணிரத்னத்துடன் கூட்டணி அமைக்கவுள்ள படம் கமலின் 234வது படமாக உருவாகவுள்ளது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் கமல் கூட்டணி அமைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்'தயாரிக்கின்றனர். இசைப்பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொள்கிறார்.

இப்படத்தில் த்ரிஷாவை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து நயன்தாராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இப்படம் மூலம் அவர் முதல் முறையாக கமலுடன் ஜோடி போடவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைதற்போது நடைபெற்று வருவதாகப் பேசப்படுகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன்தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக அவர் தமிழ் படத்தில்நடிக்கவுள்ளார். மேலும், முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

ACTOR KAMAL HASSHAN KH 234 maniratnam Vidya Balan
இதையும் படியுங்கள்
Subscribe