vidya balan

டாப்ஸி மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம்தான் ஹிந்தி படம், பிங்க். தற்போது இந்த படத்தை தமிழில் ரிமேக் செய்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத். அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் தல அஜித் நடிக்கிறார். இந்த படத்தை தயாரிக்கிறார் ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பாளருமான போனி கபூர். கடந்த மாதமே தொடங்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங், மிக விரைவில் முடிவடைந்து வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்று தெரிவித்துள்ளது படக்குழு. மேலும் இந்த படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தர், ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் நடிக்கின்றனர்.

Advertisment

தற்போது பரபரப்பாக எடுக்கப்படும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக பாலிவுட் நடிகையும், பல விருதுகளை குவித்துள்ள நடிகையுமான வித்யா பாலன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை, அப்படி இது உறுதி செய்யப்பட்டால் தமிழில் வித்யா பாலன் அறிமுகம் ஆகும் முதல் படம் இதுதான். என்னதான் அவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும், தி டர்டி பிக்ச்சர்ஸ் படம் தமிழில் டப் செய்து வெளியானதன் மூலம் தமிழர்களிடம் பிரபலமடைந்தார். இந்த படத்தில் அஜித் ஒரு நீண்ட சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அதேபோல ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்தான் வித்யா பாலனும் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. சில்க் ஸ்மித்தா வாழ்க்கை வரலாற்றில் ஸ்மித்தாவாக நடித்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment