சிலுக்கு ஸ்மிதா வேடத்தில் நடித்து தேசிய விருது வென்ற வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வித்யா பாலன் தற்போது கர்ப்பமாக இருப்பதாக திரையுலகில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் விளக்கமளித்து பேசியபோது.... ''நான் சினிமா துறைக்கு வந்து 14 வருடங்கள் ஆகிறது. என் உடல் எப்போதுமே வனப்பாகவே தெரியும். அதை யாரோ தவறாக புரிந்து கொண்டு இம்மாதிரியான வதந்தியை பரப்பியிருக்கிறார்கள்'' என்றார்.