Advertisment

'விடுதலை' - முக்கியமான காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியீடு

viduthalai train scene making video released

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சூரியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.

Advertisment

இப்படம் வெற்றிபெற்றதை அடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் சூரியும் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் இப்படத்தின் அறிமுகக் காட்சியின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 நிமிடம் இடையில் கட் எதுவும் இல்லாமல் சிங்கிள் ஷாட்டாக இடப்பெற்ற இந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கனவே படத்தின்ரிலீசுக்கு முன்பாக ஒரு மேக்கிங் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பைஅதிகரித்தது. அதனைத்தொடர்ந்து இந்த வீடியோவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisment

viduthalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe