Skip to main content

டைரக்டர்ஸ் கட் காட்சிகளுடன் ஓடிடியில் வெளியான ‘விடுதலை – பாகம் 1’

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

viduthalai part 1 streming in zee5 ott

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' கடந்த மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழைத் தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி தெலுங்கில் வெளியான இப்படம் அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் இப்படம் இன்று (28.04.2023) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் இதுவரை வெளியாகாத டைரக்டர்ஸ் கட் காட்சிகளைக் கூடுதலாக இணைத்துள்ளது படக்குழு. இது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “விடுதலை படத்தின் மீது ரசிகர்கள் பொழிந்த அன்பு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. இந்தத் திரைப்படத்திற்கான எதிர்வினைகள் ஊக்கமளிப்பதாகவும் திருப்தியளிப்பதாகவும் இருந்தது. இதில் நான் வெளிப்படுத்தியிருக்கும் எனது கண்ணோட்டத்துக்கு ஆதரவளித்து தங்களை முழுமையாக அர்ப்பணித்த எனது நடிகர்கள் மற்றும் திரைப்படக் குழுவினர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஓடிடியில் டைரக்டர்ஸ் கட் காட்சிகளையும் உங்கள் திரைக்குக் கூடுதலாகக் கொண்டு வருவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார். 

 

நடிகர் சூரி கூறுகையில், “வெற்றிமாறன் சார் தனிப்பட்ட முறையில் ஒரு நிறுவனமாகத் திகழ்கிறார். அனைத்து நடிகர்களும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள். ஆகவே  விடுதலை படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, அது எனது வாழ்க்கையை புரட்டிப்போடும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை முன்கூட்டியே நான் அறிந்தேன்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது கொஞ்சம் சர்ச்சையான விஷயம்” - வெளிப்படையாகப் பேசிய வெற்றிமாறன்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vettrimaaran speech in kalvan audio launch

ஜி.வி பிரகாஷ், பாராதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி.ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. மேலும் கடந்த வருட கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படம் வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் ட்ரைலர் மற்றும் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறனும் கலந்து கொண்டார் . அவர் பேசுகையில், “இந்த படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் இருக்கு. விடுதலை படத்தில் பாராதிராஜா சார் நடிக்க வேண்டும் என அவருக்கு ஹேரெல்லாம் ஷார்ட்டா கட் பண்ணிட்டு லுக் டெஸ்ட் எடுத்தேன். அப்புறம் லொகேஷன் பார்த்துட்டு, அந்த இடம் ரொம்ப குளிரென்றதால அவருக்கு சரியா வராது என சொன்னேன். என்னடா விளையாடுறியா, முடியெல்லாம் இப்புடி வெட்டிவிட்டுட்டு ஒத்துக்கவே மாட்டேன் என சொல்லிவிட்டார். என்ன ஆனாலும் நான் பண்றேன் என்றார். அப்புறம் நான் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன். 

கொஞ்ச நாள் கழிச்சு, டேய், என்ன வேணான்னு சொன்னில்ல, இப்ப இதே கெட்டப்புல என்னை வைச்சி ஒருத்தன் படமெடுக்க போறான் என சொன்னார். அது தான் இந்த படம். நாங்க விடுதலை படம் ஷூட் பண்ண இடத்துல தான் இதே படமும் ஷூட் பண்ணாங்க. பாராதிராஜா சார், ஸ்க்ரீனில் இருக்கும் ஒரு தருணம் கூட ஃபேக்கானதா இருக்காது. அந்த மாதிரி சின்சியரான நடிகர்கள் குறைவாகவே இருக்காங்க. அதனால் தான் அவரை எல்லாருக்கும் பிடிக்குது. எந்த நொடியுமே நடிக்க முயற்சி பண்ணாமல், அந்த இடத்தில் அந்த கதாபாத்திரமாகவே இருப்பதால் தான் அந்த உணர்வை நம்முள் ஏற்படுத்த முடியுது.

இன்னொரு விஷயம். இது கொஞ்சம் சர்ச்சையானது. யானைய வைச்சு எடுத்தாலும் டைனோசரை வைச்சு எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் படம் ஓடும்” என்றார். 

Next Story

“என் அம்மாவின் அன்பு மாதிரி...” - இளையராஜா இசை குறித்து வெற்றிமாறன்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
vetrimaaran speech in ilaiyaraaja biopic event

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்த நிலையில், மேலும் தனுஷ், இளையராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எனக்கு ராஜா சார் இசையை எப்போது கேட்டாலும் ஒன்னுதான் தோணும். அது எங்க அம்மாவுடைய அன்பு மாதிரி. நிலையானது. எப்போதுமே மாறாது. வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்தாலும் அவரின் இசை ஏற்படுத்துகிற உணர்வு எப்போதுமே அப்படியே தான் இருந்துருக்கு. அவருடன் வேலை பார்ப்பது ரொம்ப இலகுவாக இருக்கும். சமமாக நம்மை நடத்துவார்.

அவர் முதல் படம் பண்ணும்போது எனக்கு ஒரு வயசு. ஆனால் என்னோடு அவர் பேசும்போது, படம் பார்த்துவிட்டு பரிந்துரை சொல்லலாமா எனக் கேட்டார். அவர் அப்படி கேட்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆனால் கேட்டார். அப்படிப்பட்ட இடத்தில் தான் ஒரு இயக்குநரை அவர் வைத்து வேலை பார்ப்பார். அவர் இசையமைப்பதை பார்த்தால், இசையமைப்பது ரொம்ப ஈஸி என தோணும். சிரமமே இல்லாமல் வேலை பார்ப்பார். என்னுடைய பார்வையில் அவர் ஒரு மியூசிஷியன் என்பதை விட மெஜிசியன் தான். அவருடைய வாழ்க்கையை படமாக எடுப்பது நம் நாட்டினுடைய பெரிய ஆவணம்.

அவர் இப்போது வேலை பார்த்து வருகிற வாழ்க்கை, இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னால் இருக்கும் 40 வருட வாழ்க்கை, இவ்வளவு காலங்களையும் ஒரு நாட்டினுடைய வரலாற்று பதிவாக அவருடைய இசையில் நாம் சேர்க்க வேண்டும். எல்லாருடைய வாழ்க்கையிலும் தனிப்பட்ட முறையில் அவருடைய இசை இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை படமாக உருவாகும் போது தமிழ் இசை கேட்டு வளர்ந்தவர்கள் அத்தனை பேருடைய படமாக இப்படம் இருக்கும். இந்த படத்தில் ஏதாவது ஒரு விதத்தில் நான் பங்காற்ற வேண்டும் என விருப்பப்படுகிறேன். அருணுக்கு இப்படம் ஒரு கிஃப்ட். தனுஷிற்கு மற்றுமொரு சவால். எந்த சவாலை கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக தனுஷ் தாண்டி வருவார். இந்த படத்தில் ராஜா சாருடைய இசையை கேட்க ஆர்வமாக இருக்கேன்” என்றார்.