Advertisment

விடுதலை 2 படம்; அப்டேட் வெளியீடு!

viduthalai 2 update released

Advertisment

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது. இப்படம் மாபெரும் வெற்றியைப்பெற்று தந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. 1 வருடத்திற்கு முன்பாக வெளியான விடுதலை முதல் பாகத்தை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக ஆவலோடு காத்திருந்தனர். ஆனாலும், இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விடுதலை 2 படத்தின் அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் வருகிற ஜூலை 17ஆம் தேதி விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe