Skip to main content

பலநாள் காத்திருப்பு; விடுதலை 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Published on 16/07/2024 | Edited on 19/01/2025
viduthalai 2 movie update

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது. இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று தந்தது. 

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

விடுதலை 2 படத்தில் மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராஜ் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1 வருடத்திற்கு முன்பாக வெளியான விடுதலை முதல் பாகத்தை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள், இரண்டாம் பாகத்தை காண ஆவலோடு காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில், விடுதலை பாகம் 2 படத்தின் அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (17-07-24) காலை 11:30 மணியளவில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தில், அரிவாளை சுத்தியால் அடிப்பது போல் காட்சியமைத்து, கம்யூனிஸ்ட் சின்னத்தை பிரதிபலிப்பது போல் தெரிகிறது.

சார்ந்த செய்திகள்