Advertisment

‘தினம் தினமும்’ - வெளியான விடுதலை 2 பட அப்டேட்

viduthalai 2 first single update

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது.

Advertisment

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே கடந்த பிப்ரவரியில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் 5 நிமிடங்கள் கைத்தட்டி படக்குழுவினரை பாராட்டினர்.

Advertisment

இதையடுத்து கடந்த ஜூலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இதையடுத்து அடுத்த மதமான ஆகஸ்டில் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 17ஆம் தேதி ‘தினம் தினமும்’ என்ற பாடல் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ilaiyaraaja actor vijay sethupathi viduthalai 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe